Tweet

My Blog List

Total Pageviews

Friday, February 17, 2012

நேரில் ஆஜராக கூகுள், பேஸ்புக் வலைதளங்களுக்கு விலக்கு

புதுடில்லி: சமூக வலைதளங்களில் ஆட்சேபிக்கத்தக்க தகவல்களை நீக்குவது தொடர்பான வழக்கில் உயரதிகாரிகள் நேரில் ஆஜராவதிலிருந்து கூகுள், பேஸ்புக் ஆகிய வலை தளங்களுக்கு விலக்கு அளித்து டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



ஆட்சேபகரமான தகவல்களை வெளியிட்டது தொடர்பாக, பேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட 21 வலைத்தளங்களுக்கு டில்லி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.பேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள், யாகூ, யூடியூப் உள்ளிட்ட 21 வலைத் தளங்களில் ஆட்சேபகரமான விஷயங்கள் வெளியிடப்படுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கோரியும், வினய் ராஜ் என்ற பத்திரிகையாளர் டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக சில ஆதாரங்களையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை மாஜிஸ்திரேட் சுதேஸ் குமார் விசாரித்தார். அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்த்த போது, ஆட்சேபகரமான தகவல்கள் வெளியிடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வலை தளங்களின் உயரதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து கூகுள், பேஸ்புக் வலைதளங்கள் டில்லி ஐகோர்டில் மனு தாக்கல் செய்தன. கூகுள் சார்பில் வக்கீல் என்.கே.கவுல், பேஸ்புக் சார்பில் வக்கீல் சித்தார்த் ஆகியோர் ஆஜராகினர்.

மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் கெயட் , கூகுள், பேஸ்புக் ஆகிய வலைதளங்களின் உயரதிகாரிகள் மாஜிஸ்திரேட் முன்பு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை மார்ச் 13-ம் தேதி ஒத்தி வைத்தார்.

0 comments:

Post a Comment