Tweet

My Blog List

Total Pageviews

Saturday, January 28, 2012

விஜயின் "துப்பாக்கி" படத்தில் பாப் பாடகர் ஏகான்!!!

"நண்பன்" படத்திற்கு பிறகு, இளைய தளபதி விஜய் நடித்து கொண்டிருக்கும் "துப்பாக்கி" படத்திற்காக பிரபல சர்வதேச பாப் பாடகர் 'ஏகான்' ஒரு பாடல் பாடப்போகிறார்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படம் பற்றி ஏற்கனவே நிறைய செய்திகள் வந்துள்ளன. இப்போது பிரபல சர்வதேச பாப் பாடகர் 'ஏகான்' ஒரு பாடலை படத்திற்காக பாடப்போகிறார் என்ற ஒரு புதிய தகவல் வந்துள்ளது. இவர் பாலிவூட் நடிகர் 'ஷாருக்கான்' நடித்த "ரா.ஒன்" படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாட்டின் மூலம் இந்திய ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.


இசையமைப்பாளர் 'ஹாரிஸ் ஜெயராஜ்' இன் இசையும், பாப் பாடகர் 'ஏகான்' இன் பாடலும் படத்திற்கு பக்க பலமாக இருக்கும் என படக்குழுவினர் சொல்கிறார்கள். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு மும்பை பகுதியில் நடைபெற்று வருகிறது.

0 comments:

Post a Comment