Tweet

My Blog List

Total Pageviews

Saturday, January 21, 2012

SOPA stopped after unprecedented online protests

WASHINGTON • U.S. lawmakers stopped anti-piracy legislation in its tracks Friday, delivering a stunning win for Internet companies that staged an unprecedented online protest this week to kill the previously fast-moving bills.
Harry Reid, the Senate Democratic leader, said he would postpone a critical vote scheduled for Jan. 24 “in light of recent events.”
Lamar Smith, the Republican chairman of the House of Representatives Judiciary Committee, followed suit, saying his panel would delay action on similar legislation until there is wider agreement on the issue.



வாஷிங்டன்: இணையத்தின் கறுப்புக் கொடி போராட்ட எதிரொலியாக, அமெரிக்க செனட் சபையில் 'சோபா' (SOPA) சட்டத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டது.

இணைய திருட்டை தடுப்பதற்கான சட்டம் என்ற பெயரில் அமெரிக்க செனட் சபையில் அறிமுகப்படுத்தவிருந்த 'சோபா'வுக்கு எதிரான இணையப் போராட்டம், அண்மைக்காலமாக வலுபெற்றது.
இதன் உச்சமாக, ஒரு நாள் முழுவதும் விக்கிபீடியாவின் ஆங்கிலப் பக்கங்கள் முழுமையாக மூடப்பட்டது. இப்படி பகிரங்கமான போராட்டத்தில் விக்கிபீடியா ஈடுபட்டது இதுவே முதல் முறை. இந்தப் போராட்டத்துக்கு கூகுள் நிறுவனமும் ஆதரவு தெரிவித்தது.

பிரபல சமூகவலைத்தளமான 'ஃபேஸ்புக்'கின் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்-கும் இணையைப் போராட்டத்தில் இணைந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஸ்டாப் ஆன்லைன் பைரசி ஆக்ட் (Stop Online Piracy Act - SOPA) மற்றும் பிபா (PIPA - PROTECT IP Act - புரடக்ட் இன்டல்க்சுவல் பிராபர்டி ரைட்ஸ் - அறிவு சொத்துரிமை பாதுகாப்பு சட்டம்) ஆகியவை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 24-ம் தேதி அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்படவிருந்த இந்தச் சட்டங்கள், மறுதேதி குறிப்பிடாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவர் ஹாரி ரெய்டு, இந்த மசோதாக்கள் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து, இணைய சுதந்திரம் உள்ளிட்ட விவகாரங்களைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அமெரிக்க செனட் சபையின் இந்த முடிவு, விக்கிபீடியா முன்னெடுத்த இணைய கறுப்புக் கொடி போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment