Welcome to Technical Kirukkan

Free Downloads,Mobile Stuff, PC Stuff, Downloads, Technology Reviews ans Stuff and alot you can get here.

Need Help on Troubleshooting PC's

We are ready to help you for any Repair or Troubleshoot your PC for free, just send a mail to techkirukkan@live.com for Tech Support .

Android, Symbain, Java, Anna OS Support for Mobiles

You can find here for any OS Updates, New Application Launches in Android Market,and other Java,SIS updates with Tech support for your Mobile Repairs and Upgrades.

Get Aware and Live Easy with Technology

Unlimited Free Tech Support for your Devices ,mail us at techkirukkan@live.com.

Tweet

My Blog List

Total Pageviews

Showing posts with label Tips. Show all posts
Showing posts with label Tips. Show all posts

Monday, May 21, 2012

பிரவுசரிலேயே ஸ்கைப்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் வசதியினைத் தன் பிரவுசரிலேயே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஒருவருக்கொருவர் வீடியோ மற்றும் ஆடியோ வழி தொடர்பு கொள்ள, பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஸ்கைப் சாப்ட்வேர் தொகுப்பினைத்தான்.
 
 
 
 

யாஹூ மெசஞ்சர், கூகுள் போன்றவை இதற்குத் துணை புரிந்தாலும், பலரும் ஸ்கைப் அப்ளிகேஷனையே விரும்பு கின்றனர்.
ஸ்கைப் நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்னர், அதன் வாடிக்கையாளர்களைத் தன் பிரவுசருடன் இணைக்கும் முயற்சி இது என இத்துறையில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

இதில் ஒன்றும் தவறு இல்லையே. ஸ்கைப் தேவைப்படுவோர் இப்போது அதற்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பைத் தனியே தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டியதுள்ளது. பிரவுசரிலேயே இது கிடைத்துவிட்டால், ஸ்கைப் பயன்படுத்துவோருக்கு மிகவும் எளிதாகப் போய்விடும்.

ஸ்கைப் பார் பிரவுசர்ஸ் (“Skype for Browsers”) என்ற திட்டத்திற்கு தொழில் நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுவதாக, மைக்ரோ சாப்ட் அறிவித்துள்ளதாகவும், அந்த அறிவிப்பே மேற்கூறிய தகவலை உறுதி செய்வதாகவும், சில இணைய தளங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பேஸ்புக் வழியாக ஸ்கைப் வசதியைப் பயன்படுத்த முடியும். ஆனால், இது முழுமையான ஸ்கைப் திறன் கொண்ட தல்ல. இதில் எச்.டி.எம்.எல்.5 வசதிகள் கிடைப்பதில்லை. எனவே மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் முயற்சிகள் இணைய வானத் தின் எல்லைகளைக் கூடுதல் வசதிகளுடன் விரிப்பதாக இருக்கும்.

இணையத்திற்கான ஸ்கைப் பதிப்பு வெளியானால், இணையத் தொடர்பினைத் தரும் எந்த ஒரு கம்ப்யூட்டர் மூலமாகவும், ஸ்கைப் தரும் வசதிகளை அனுபவிக்க முடியும். Voice over Internet Protocol எனப்படும் வசதி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும்.

மேலும் மைக்ரோ சாப்ட் தன் பிரவுசரிலேயே இதனைத் தருவது, இதே போல வசதியினைத் தரும் மற்ற அப்ளிகேஷன்களுக்குச் சரியான போட்டியைத் தரும். மைக்ரோசாப்ட் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இடம் முன்னணிக்கு வரும்; மற்ற பிரவுசர்களைப் பின்னுக்குத் தள்ளும். பல முன்னணி நிறுவனங்களின் (Apple, Google, Cisco, LifeSize etc.) வீடியோ கான்பரன்சிங் வர்த்தகம் நஷ்டத்தைச் சந்திக்கும்.

தற்போது ஸ்கைப் அப்ளிகேஷனை உலகெங்கும் ஏறத்தாழ 75 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோசாப்ட், ஸ்கைப் வசதியைத் தன் பிரவுசரில் மட்டுமின்றி, ஆபீஸ், விண்டோஸ், எக்ஸ்பாக்ஸ் மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றிலும் இணைத்திட முயற்சிகளை மேற்கொள்ளும் போல் தெரிகிறது. இந்த முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்தால், ஸ்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை விரைவில் நூறு கோடியைத் தாண்டும் என அனைவரும் கருதுகின்றனர்.

பலரும் இது சாத்தியமே என எண்ணுகையில், ஒரு சில வல்லுநர்கள், ஸ்கைப் போன்ற ஒரு ஆடியோ, வீடியோ அப்ளிகேஷனை, பிரவுசர் மற்றும் ஆபீஸ் போன்றவற்றுடன் இணைப்பது இயலாத ஒன்று எனக் கருதுகின்றனர்.
தகவல் தொழில் நுட்ப உலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை. எனவே ஸ்கைப் நமக்கு அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் இணைந்து கிடைக்கும் அந்நாளை எதிர்நோக்குவோம்

Sunday, May 20, 2012

சில தொழில் நுட்ப சொற்கள்

ஐ.பி. அட்ரஸ் (IP Address): கம்ப்யூட்டர் நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண்.


ஸ்க்ராம்ப்ளிங் (Scrambling): கம்ப்யூட்டர் பைலில் உள்ள டேட்டாவினை அடுத்தவர் படித்துப் பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ் செய்து வைத்துக் கொள்வது. இதனால் அதனை உருவாக்கியவார் மற்றும் பெறுபவர் மட்டுமே சரி செய்து படிக்க முடியும். இதனை சரி செய்வதற்கான வழியை இருவரும் மறந்து விட்டால் பைல் தகவல் உருப் பெறாது.

மதர்போர்ட் (Motherboard): பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.

பயாஸ் (BIOS - Basic Input Output System): அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம், ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம்.

ஒரு கம்ப்யூட்டருக்கு மின் சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவையான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லை என்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.

Friday, May 18, 2012

உணவு உட்கொண்டதன் பின் குளிர்நீர் அருந்தாதீர்கள்!: இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.




ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.

இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

உணவு உண்ட பின் ஜில்லென்று குளிர்பானம் அருந்துவது இதயபாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு நோய் உட்பட பல்வேறு இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும் போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.

எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள், அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

Tuesday, April 3, 2012

MP3 பிளேயர் தரும் ஆபத்து

 
 
வாக்மேன் மறைந்து எம்பி3 பிளேயர் வந்த போது, இசையை ரசிக்க, அனைவரும் அதற்கு மாறினர். மிகத் துல்லிதமான இசை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பிரச்னை இன்றி தரும் வசதி ஆகியவற்றினால், பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டனர்.

ஆனால், இது வேறு சில பிரச்னைகளைத் தருவதாக, டெல் அவிவ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து எம்பி3 பிளேயரை, ஹெட் செட் மாட்டி கேட்டு வருபவர் களுக்கு, மிக இளம் வயதிலேயே காது கேட் கும் திறன் படிப்படியாக குறையத் தொடங் குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

தற்போது நால்வரில் ஒருவருக்கு இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

எம்பி3 பிளேயர் மட்டு மின்றி, தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஐ-பாட் மியூசிக் பிளேயர் பயன் படுத்துபவர்களின் கதியும் இதே தான் என வும் கூறி உள்ளனர்.

இதனால், இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து, ஒரு சந்ததியே செவிகளின் கேட்புத் திறன் குறைவாக உள்ளதாக அமைந்துவிடும் என்றும் எச்சரித்து உள்ளனர்.

அதிக சத்தத்தில் பாடல்களைக் கேட்பதனால், தொடர்ந்து தாங்க முடியாத அளவிற்கு ஒலி அலைகள் காதுகள் வழியாக மூளைக்குப் பயணமாகின்றன. இவை ஏற்படுத்தும் தீய விளைவுகளை, உடனடி யாக நாம் அறிய முடிவதில்லை.

படிப் படியாக அவை நம் கேட்கும் திறனைக் குறைக்கின்றன. தெரிய வரும்போது இதற்கான தீர்வு கிடைப்பதில்லை. வளரும் இந்த தீய பழக்கம் குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் களுக்கு அறிவித்தால் நல்லது.

Saturday, January 28, 2012

Tips to Manage your Laptop Heat

Tamil Tips :

கடந்த சில ஆண்டுகளாக மடிக்கணணிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது.மடிக்கணணியின் பயன்பாடு அதிகரிப்பினால் இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.

சில இடங்களில் மடிக்கணணிகள் கூடுதல் வெப்பத்தினால் தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த மடிக்கணணிகளில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.

மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து மடிக்கணணிகள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.

ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம்.

டெஸ்க்டொப் கணணிகளைக் காட்டிலும், மடிக்கணணிகள் இடம் மிகக் குறைவு. இதனால் அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள் சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால் இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.

அடுத்த பிரச்னை இயக்க திறன். மடிக்கணணிகளில் அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் இயங்குதளங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.மடிக்கணணிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.பொதுவாக மடிக்கணணியில் வன்தட்டில் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால் பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.

விசிறிகள் சோதனை: மடிக்கணணியில் வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால் உடனே திறந்து இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது.

காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.

பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம் வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு உங்கள் மடிக்கணணி தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள் இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.

பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால் வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம்.
வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து மடிக்கணணியை இயக்கக்கூடாது. அதே போல மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே கணணியை வைத்திருக்கக்கூடாது.

இதை மடிக்கணணி என அழைத்தாலும் நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால் வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.

மடிக்கணணியில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும்.மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால் வெப்பமானது கணணியின் மற்ற பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.