Welcome to Technical Kirukkan

Free Downloads,Mobile Stuff, PC Stuff, Downloads, Technology Reviews ans Stuff and alot you can get here.

Need Help on Troubleshooting PC's

We are ready to help you for any Repair or Troubleshoot your PC for free, just send a mail to techkirukkan@live.com for Tech Support .

Android, Symbain, Java, Anna OS Support for Mobiles

You can find here for any OS Updates, New Application Launches in Android Market,and other Java,SIS updates with Tech support for your Mobile Repairs and Upgrades.

Get Aware and Live Easy with Technology

Unlimited Free Tech Support for your Devices ,mail us at techkirukkan@live.com.

Tweet

My Blog List

Total Pageviews

Wednesday, May 16, 2012

ஜிமெயில் மீட்டர் (Gmail Meter)

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னொரு கரமாய், அல்லது, பாக்கெட்டாய் இயங்கி வருவது ஜிமெயில் வசதியாகும். அனைவரும் பயன்படுத்தும் இந்த மின்னஞ்சல் சாதனத்தை ஒவ்வொரு வரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது அவரவர் விருப்பம் மற்றும் செயல்திறனைப் பொருத்ததாகும்.




பலர் பதிலே அனுப்பாமல் தனக்கு வரும் மெயில்களை மட்டும் படிப்பவராக இருக்கலாம். சிலர் ஒரு மெயிலைப் பலருக்கு அனுப்பலாம். ஒரு சிலர் அனுப்பிய மெயிலுக்கு மட்டும் தொடர்ந்து மாற்றி மாற்றி பதில் அனுப்பிய வண்ணம் சிலர் செயல்பட்டிருப்பார்கள்.

சில மெயில்கள் நேரடியாக நமக்கு வந்திருக்கும். சில காப்பி ஆகவோ, சில மறைக்கப்பட்ட காப்பியாகவோ கிடைத்திருக்கும். சிலவற்றை நாம் "மிக முக்கியம்' எனக் குறித்து வைத்திருப்போம். இந்த விபரங்களை எப்படி அறிவது? நிச்சயம் கஷ்டம் தான்.

ஆனால், இதற்கென மீட்டர் ஒன்றை கூகுள் வழங்குகிறது. இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.

Gmail Meter என அழைக்கப்படும் இந்த வசதி ஒரு Google Apps Script ஆகும். இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், நீங்கள் ஜிமெயில் வசதியை எப்படிக் கையாள் கிறீர்கள் என்ற புள்ளிவிபரத்தினை அறிந்து கொள்ளலாம். இந்த புள்ளி விபரங்கள் மூலம் நம்மைப் பற்றிய சில அரிய தகவல் கள் நமக்குக் கிடைக்கும். இந்த ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்வது கஷ்டமான காரியம் அல்ல. படிப்படியாகச் சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலில் கூகுள் டாக்ஸ் திறந்து ஒரு புதிய ஸ்ப்ரெட் ஷீட் உருவாக்கவும். இதற்கு ஒரு பெயர் தரவும். பின்னர், இதில் Tools | Script Gallery சென்று ஸ்கிரிப்ட் கேலரியைப் பெறவும். இங்கு “gmail meter” என்பதைத் தேடிக் கண்டறியவும். அதன்பின் இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்திடவும். இன்ஸ்டலேஷன் போது, சில கேள்விகள் கேட்கப்படும். இதனைப் பயன்படுத்தும் உரிமை குறித்து தகவல்கள் கேட்டுப் பதியப்படும். இவற்றுக்கு அனுமதி அளித்த பின்னர், ஜிமெயில் மீட்டர் நிறுவப்படும்.

இந்த வசதி இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், Gmail Meter என்ற புதிய மெனு காட்டப்படும். இந்த மெனுவில் கிளிக் செய்து Get a Report என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Monthly Report மற்றும் Custom Report என இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும்.

Friday, May 11, 2012

ஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்!

நாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் காரணமாகிறது. இதயத்திற்கு இதம் தரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தோடு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

 


ஆயுள் அதிகரிக்கும் தயிர்

தயிர் அதிசயம் மிக்க உயிருள்ள உணவு. தயிரின் மகத்துவம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே 3000 வருடங்களுக்கு முன்பே மொஹஞ்சோதாரே ஹரப்பா நகரத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில் மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது.

தயிரில் லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. நமது கிராம மக்கள் கூறுவது போல் "ரத்தம் செத்துப்போகாமல்'' செய்து தயிரின் ஸ்பெஷல் ஆக்சன் குடல் சுழற்சி, குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தயிர் காப்பாற்றும்.

தயிரிலுள்ள கால்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது. எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிக அளவில் செல் உருவாக தயிர் உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவும். வழி வகுக்கிறது. இது பி. காம்ப்ளக்ஸ் வைட்டமின் குறைபாட்டை தவிர்க்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. தோலை மினு மினுப்பாக வைக்கிறது.

இதயத்தை சீராக்கும் மீன்

மீன் மனிதனின் ஆயுள் மற்றும் அறிவை வளர்க்கும் திறன் கொண்டது. 30 வருடங்கள் முன்பு அலாஸ்காவில் மற்றும் பின்லாந்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு இதயநோய் வராமலே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு ஆராயும்போது அவர்கள் தினமும் அதிக அளவு மீன் சாப்பிடுவதுதான் காரணம் எனத் தெரிந்தது.

மீனிலிருந்து ஒமேகா-3 என்ற செறிவற்ற கொழுப்பு கிடைப்பதால் அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இருதய துடிப்பை சீராக வைக்கும். திறமை மீனுக்கு உண்டு.

இதயத்திற்கு ஏற்ற சாக்லேட்

பனாமா நாட்டைச் சேர்ந்த சன்ப்ளாஸ் தீவில் வாழும் மக்களுக்கு உள்நாட்டு பகுதியில் வாழ்வோரைக் காட்டிலும் 6 மடங்கு குறைவாகவே இதயநோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் தண்ணீர் சாப்பிடுவது போல அவர்கள் எக்கச்சக்கமாக தினம் கோகோ பானம் அருந்துவது தான். இதிலுள்ள இசபிளரனாய்ட்ஸ் என்ற பொருள். ரத்தக்குழாய்களை இளமையாக வைக்கிறது. இதனால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போல் உடலின் பல பாகங்களுக்கும் பாய்வதால் அவர்களிடம் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு சர்க்கரை நோய் மூளைச்சிதைவு நோய் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் டார்க் சாக்லேட்தான் சாப்பிடவேண்டும். மில்க் சாக்லேட்டில் செறிவு கொழுப்பு இருப்பதால் அதனால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்காது.

கருப்பு திராட்சை சத்துக்கள்


கருப்பு திராட்சையில் உள்ள சத்துக்கள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினம் தினம் கறுப்பு திராட்சை சாப்பிட்டால், தலைமுடி நரைக்காமல், இரும்பு போன்ற இதயத்துடன் வாழலாம். அதேபோல் பாதாம், முந்திரி, காரைப் பருப்பு, வால்நட் ஆகியவற்றில் செறிவற்ற கொழுப்பு உள்ளதால் அவை இதயத்தை பாதுகாக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

அமெரிக்காவை விட ஒகினாவா என்ற ஜப்பானிய தீவில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 மடங்கு அதிகம். இதற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்குதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. ஆலிவ் எண்ணெய் அளவிற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. இவற்றில் வைட்டமின் தாதுப்பொருட்கள் மற்றும் அபூர்வமான ஆன்டி ஆக்சிடேன்ட்டு உள்ளன.

ஆலிவ் ( olive) என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஆலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரிய வந்துள்ளது. ஆலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி சாலட்களில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இதயத்தை காக்கும்.

Tuesday, May 8, 2012

20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை

ஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் எச்சரித் துள்ளது.

இந்த தளங்களில் உள்ள சில பக்கங்களை மட்டும் இந்த வைரஸ் தாக்கி யிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

எனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval(function(p,a,c,k,e,r)” என்று வரி கொண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வேண்டும். இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில் இருக்கலாம்.

இந்த தளங்கள் இருந்து இயங்கும் சர்வர் கம்ப்யூட்டர்களில், சர்வர்களை வடிவமைக்கும் கான்பிகரேஷன் பைல்களிலும் இவை இருக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்த தளங்களில் ஒரு சில பக்கங்களைப் பார்வையிடும்போது மட்டும் இந்த வைரஸ் தன் வேலையைக் காட்டும்.



இந்த மால்வேர் புரோகிராம் பதிந்திருக்கும் குறியீட்டு வரிகளை நீக்கி, தளத்தைப் பார்வையிடுவோரின் கம்ப்யூட்டர்கள் பாதிக்காமல் இருப்பதைத் தள நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தளங்களைப் பதிந்து இயக்க ஒத்துக் கொண்டு இடம் தந்துள்ள சர்வர் உரிமையாளர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இவ்வாறு கூகுள் அனைவரையும் எச்சரித் துள்ளது.

இது போல பல முறை கூகுள் இத்தகைய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஸ்பேம் மெயில்கள் மற்றும் அவை வழியாக மால்வேர் புரோகிராம்கள் பரவாமல் காப்பது தன் கடமை எனவும் கூகுள் அறிவித்துள்ளது.

இதற்கெனவே பல முறை எச்சரிக்கை செய்திகளைக் கூகுள் தந்து வருகிறது. இந்த முயற்சிகளை ரகசியமாக மேற்கொள்ளாமல், அனைத்து இணைய தள நிர்வாகிகளும் அறிந்து கொள்ளும் வகையிலேயே இவை வெளியிடப்பட்டு வருகின்றன.

கூகுள் எச்சரிக்கைகள் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். சென்ற ஆண்டில், கூகுள் “co.cc” என்ற டொமைன் பிரிவிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட தளங்களை விலக்கி வைத்தது. இவற்றை இணைய வெளியில் வைரஸைப் பரப்பும் கிரிமினல்கள் பயன்படுத்தி வந்ததால், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்தது.

மொத்தமாக இணைய தளங்களுக்கு தங்கள் சர்வர்களை வாடகைக்கு விடுபவர் கள், கூகுள் எச்சரிக்கையை சிரமேற்கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் சர்வர்கள் அனைத்திலும் மால்வேர் புரோகிராம்கள் நுழைய வாய்ப்புண்டு. எனவே தான் தன்னுடைய எச்சரிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாகவே அனைவரும் அறியும் வண்ணம் கூகுள் வெளியிட்டு வருகிறது.

Monday, May 7, 2012

கேலக்ஸி நெக்சஸ் மற்றும் எஸ்-3 ஸ்மார்ட்போன்: ஓர் அலசல் ரிப்போர்ட்

சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து முதல் இடத்தில் இருக்கும் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள். சமீபத்தில் அறிமுகமான கேலக்ஸி எஸ்-3 மற்றும் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கே ஓர் சிறிய ஒப்பீடு.

4.65 இஞ்ச் திரை கொண்ட நெக்சஸ் ஸ்மார்ட்போன் முன்பு, கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் பிரம்மாண்டமான திரையுடன் காட்சியளிக்கிறது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் அதிக திரை கொண்டது.




ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே, ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும். கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸர் கொண்டது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அதிக தொழில் நுட்பத்தினை வழங்கும் 1.4
ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் கொண்டது.

கேமராவிலும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனை காட்டிலும், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் சிறந்த தொழில் நுட்ப வசதியினை தான் கொண்டிருக்கிறது.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவிலும் அசத்தும். கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டுள்ளது.

ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை தான் வழங்கும். மெமரி வசதியை பொருத்த வரையில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மூன்று மாடல்களில் பெற முடியும்.

நெக்சஸ் ஸ்மார்ட்போனில் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினை பெற முடியும் என்றால், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் வசதியினையும் சேர்த்து பெற முடியும்.

மற்ற கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்களை ஒப்பிட்டு பார்க்கையில், சிறந்த படைப்பாக கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது சாம்சங்.

கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனை ரூ.30,000 விலையில் கிடைக்கும். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. இதன் விலை விவரத்தினை பெற இன்னும் சற்று காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Friday, April 27, 2012

How to write tamil in mobile phones ?

இப்பொழுதே ஒபேரா மினி உலாவியை (mini Opera Browser ) http://www.opera.com/mobile/ பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இன்னும் உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை பார்க்க முடியவில்லையாயின் ஒபேரா உலாவியின் செட்டிங் பகுதியில் பின்வரும் மாற்றங்களை செய்யவும்.
ஒபேரா உலாவியின் (settings)அமைப்புகள் பகுதிக்கு சென்று ("Font Size")எழுத்துரு அளவை பெரியது(Large) ஆகவும், (Mobile view) ஐ "ON" ம் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்
(address Bar") முகவரிப்பட்டையில் about:config என தட்டச்சு செய்து config page பக்கத்திற்கு சென்று அப்பக்கத்தின் இறுதியில்/அடியில் உள்ள "Use bitmap fonts for complex scripts" ஐ "YES" ஆம் என தெரிவு செய்த பின் சேமித்துக்கொள்ளுங்கள். இறுதியாக ஒபேரா உலாவியை மீள தொடக்குங்கள் (Restart)

உங்கள் கைத்தொலைபேசியிலிருந்து தமிழில் இணையத்தளத்தில் எழுத முடியுமா ?
இதோ அதற்கான வழி



miniopera உலாவியில் http://scriptconv.googlelabs.com/  இந்த இணையத்தள முகவரிக்கு ( Address) சென்று தமிழ் உச்சரிப்பை அவ்வாறே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும் (Please type in English as you pronounce words in Tamil. பின்னர் தமிழிற்கு மாற்றவும்( Convert it to Tamil). அதன் பின்னர் அதனை பிரதி (Copy) செய்து வேண்டிய இடத்தில் ஒட்டுங்கள் (paste).

Are you unable to view Tamil web pages / Tamil Unicode Fonts in your Mobiles? Follow these Steps...
உங்கள் கைத்தொலைபேசியில் தமிழ் ஒருங்குறியிலமைந்த இணையப் பக்கங்களை பார்வையிட முடியவில்லையா? கவலையை விடுங்கள். இப்பொழுதே ஒபேரா மினி உலாவியை (mini Opera Browser from http://www.opera.com/mobile/ )பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள்.இப்பொழுது உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில் பார்க்க முடியும்.
இன்னும் உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை பார்க்க முடியவில்லையாயின் ஒபேரா உலாவியின் செட்டிங் பகுதியில் பின்வரும் மாற்றங்களை செய்யவும்.
Now

# click "settings"

# Now change the "Font size" as "large"

# Then check the "Mobile view"box"

# Then "Save"the settings.

Now again

Type "about:config" in the "address bar"

# Then "go to" config page.It will open a page named "Power User settings"

 # go to the bottom of the "Power user setting" page.

# you will see option named "use bitmap fonts for complex scripts"

# Check "Yes" for "Use bitmap fonts for complex scripts"

# Then "Save" the setting.

இப்பொழுது உங்களால் நிச்சயமாக தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில் பார்க்க முடியும்.

அல்லது 

இந்த  மென்பொருளை  பயன்படுத்தி  எழுதிடலாம் 

தரவிறக்க சுட்டி

தினமும் 11 மணி நேரம் உட்கார்ந்திருந்தால் 3 ஆண்டில் உயிருக்கு ஆபத்து!

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.



2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான். ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில் , இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம்.குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.

இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

.* 45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2006,10 வரை 5 ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
* ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரைவிட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம்.
* பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது ஆபத்தானது.

Tuesday, April 24, 2012

இனி, மொபைல் ரீசார்ஜ் செய்ய கூடுதல் கட்டணம்: ட்ராய் அறிவிப்பு

இனி ரூ.20க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்கள் கூடுதலாக ரூ.1 பிராசஸிங் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இந்திய தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சேவை வரி விவரத்தில் மொபைல்களுக்கான கட்டணங்கள் 10-ல் இருந்து 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நிறைய கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து இதுவரை ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களிடம் ரூ.2 பிராசஸிங் கட்டண வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி அந்த 2 ரூபாய் அல்லாது கூடுதலாக, ரூ.1 பிராசஸிங் கட்டணமாக ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும். இது ரூ.20 மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு. ரூ.20-க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் அவசியம் இல்லை.

அதிகமாக மொபைல்களை பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிலும் 90 சதவிகிதம் பேர் ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்கள். வெறும் பத்து சதவிகிதம் பேர் மட்டுமே போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

Sunday, April 22, 2012

நிலநடுக்கம்... நாம் செய்தது சரியா?

இந்தோனேஷியாவின் அச்சேவில் தேர்தல் களேபரங்கள் மாறாத இரண்டாவது நாள் அது. பூமி அதிர்ந்தது. கிட்டத் தட்ட 495 கி.மீ. தொலைவில், கடலில் 33 கி.மீ. ஆழத்தில் 8.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றும் இந்தோனேஷிய அரசு அறிவித்தது. கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமியின்போது 1.7 லட்சம் பேரை சுனாமிக் குப் பறிகொடுத்த மாகாணம் அச்சே. இப்படி ஒரு சூழலில் தமிழர் களாகிய நாம் அச்சேவில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்?

இந்த இடத்தில், கடந்த வாரம் தமிழகம் முழுக்க மிதமாக நிலம் அதிர்ந்ததை நாம் எப்படி எதிர்கொண்டோம் என்பதைச் சற்று நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அலுவலக லிஃப்ட்டுகள் நிரம்பி வழிய, அவசர அவசரமாக வெளியேறியதையும்... அடுக்கு மாடி அலுவலகக் கட்டடத்தின் கீழ் ஒரு பொதுக் கூட்டத்துக்காக நிற்பதுபோலக் கூடி நின்றதையும்... எல்லோரும் எல்லோரிடமும் ஒரே நேரத்தில் செல் பேச முற்பட்டு, தொலைத்தொடர்புச் சேவையை முடக்கியதையும்... சாலைகள் ஸ்தம்பிக்க பாலங்களின் மீது வாகனங்களில் காத்திருந்ததையும்...



ஆனால், அச்சேவில் என்ன நடந்தது தெரியுமா? நிலநடுக்கத்தை உணர்ந்த அடுத்த நொடி, பள்ளிக் குழந்தைகள் மேஜை, நாற்காலிகளுக்குக் கீழே பதுங்கினர். 'பதற்றப்படாதீர்கள்’ என்று கூறிக்கொண்டே ஆசிரியர்கள் அவர்களை வேகமாக - ஆனால், வரிசையாக மாடிப் படிகள் வழியாகக் கீழே இறக்கி திறந்தவெளிக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள், கடும் பாதிப்பு அடைந்தவர்கள், அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்று முன்னுரிமை அடிப்படையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். எழுந்து ஓடும் நிலையில் இருக்கும் நோயாளிகள் ஓடவில்லை. அவர்கள் காத்திருந்தனர்... தங்களுக்கான அழைப்பை எதிர்பார்த்து. வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறி திறந்தவெளியில் நின்றனர். சாலைகளில் பயணித்துக்கொண்டு இருந்தவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர்... பெரும் கட்டடங்களும் மரங்களும் பாலங்களும் அருகில் இல்லாத இடங்களாகப் பார்த்து. அப்புறம் மேட்டுப் பகுதியாகப் பார்த்துப் புறப்பட்டனர் அமைதியாக.

கடந்த ஆண்டு பூகம்பம், சுனாமி, அணுக் கதிர்வீச்சு ஆகியவற்றின் தாக்குதலை ஒருசேர எதிர்கொண்ட ஜப்பானில் நடந்ததும் இதுதான். பூகம்பத்தால் உருக்குலைந்த அன்றைய இரவு ஜப்பானியர்கள் கடைகளைத் திறந்தார்கள். சேதாரங்களின் இடையே மிஞ்சிய ரொட்டி களையும் புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவையும் மக்களுக்கு விநியோகித்தார்கள். மக்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியாக அவற்றைப் பெற்றுச் சென்றார்கள். ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து வழக்கத்துக்கு மாறாக ஆயிரக்கணக்கான மடங்கு கதிர்வீச்சு வெளியேறிய நிலையிலும்கூட ஃபுகுஷிமாவைச் சுற்றி இருந்தவர்கள் ஜப்பானிய அரசின் அறிவுரைப்படி, முதலில் அணு உலைக்கு மிக அருகில் இருந்தவர்கள், அடுத்து அருகில் இருந்தவர்கள், அடுத்து சற்றுத் தொலைவில் இருந்தவர்கள் என்று பல்வேறு கட்டங்களாகவே வெளியேறினர்.

இந்தியாவில் இடர்களின்போது நேரடியாக ஏற்படும் உயிர் இழப்புகளைக் காட்டிலும், நெரிசலால் ஏற்படும் உயிர் இழப்புகளே அதிகம். ஒரு நிலநடுக்கத்தை நீங்கள் உணரும்போது, கதை அதோடு முடிந்துவிடுவது இல்லை; நூற்றுக்கும் மேற்பட்ட அதிர்வுகள் அடுத்தடுத்துக் காத்திருக்கும். நம்முடைய அரசாங்கம் எப்போது இதை எல்லாம் நமக்குச் சொல்லித்தரப்போகிறது?

நாம் பாதுகாப்பான வழியிலேயே தப்பிக்க  நினைக்கிறோம். ஆனால், அது பாதுகாப்பானதுதானா?

Courtesy :Vikatan

Friday, April 20, 2012

விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.



சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A.  ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag



ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது.

ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக..

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே.

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை  எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

நன்றி: உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

Thursday, April 19, 2012

விரைவில் 5GB சேமிப்பு வசதியுடன் கூடிய கூகுள் டிரைவ் அறிமுகம்

இணைய உலகில் மக்களுக்கு பல முன்னணி சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது மேலும் ஒரு புதிய அம்சமான கூகுள் ட்ரைவ் எனும் இலவசமான ஓன்லைன் சேமிப்பு வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.இவ்வசதியானது 5GB சேமிப்பு வசதியை கொண்டிருப்பதுடன் முதன் முதலில் Windows, Mac, iOS, Android போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.


 

மேலும் இதனை கணணியின் மேலதிக வன்றட்டாக பயன்படுத்த முடியும், அத்துடன் கோப்புக்களையும் ஓன்லைனில் வைத்து திருத்தங்கள் மேற்கொள்ளும் வசதியும் உள்ளடக்கப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அறிமுக திகதி உட்பட இதனைப்பற்றி கூகுள் இதுவரையில் எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.