Tweet

My Blog List

Total Pageviews

Friday, April 27, 2012

தினமும் 11 மணி நேரம் உட்கார்ந்திருந்தால் 3 ஆண்டில் உயிருக்கு ஆபத்து!

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.



2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான். ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில் , இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம்.குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.

இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

.* 45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2006,10 வரை 5 ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
* ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரைவிட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம்.
* பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது ஆபத்தானது.

0 comments:

Post a Comment