Tweet

My Blog List

Total Pageviews

Wednesday, March 21, 2012

நவீன கதிர்வீச்சு ஆயுதம் அமெரிக்கா அறிமுகம்



 தோட்டா போல பாயும் உடம்பு தீயாய் எரியு

வாஷிங்டன் : மைக்ரோ கதிர்களை பாய்ச்சும் அதிநவீன ஆயுதத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒரு கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கும். உடம்பில் காயம் ஏற்படாது. ஆனால், தீப்பிடித்தது போல உடம்பில் எரிச்சல் ஏற்படும். மக்களோடு மக்களாக கலந்து இருக்கும் கிரிமினல்களை கண்டறிந்து சுடுவது, கலவரம் போன்ற சூழல்களில் அப்பாவி பொதுமக்களும் குண்டுக் காயம் அடைகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் மாற்று ஆயுதம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்க ராணுவம் தீவிரமாக ஈடுபட்டது.

 ‘ஆக்டிவ் டினையல் சிஸ்டம்’ (ஏடிஎஸ்) என்று பெயரிடப்பட்டுள்ள மைக்ரோவேவ் கதிர்வீச்சு ஆயுதத்தை அமெரிக்க ராணுவம் உருவாக்கியுள்ளது. வர்ஜீனியா மாநிலம் குவான்டிகோ நகரில் உள்ள ராணுவ தளத்தில் 2 வாரம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இது செயல்படும் விதம் பற்றி ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: மரணம் ஏற்படுத்தாத வகையில் தாக்குதல் நடத்தும் ஆயுத ஆராய்ச்சியில் அமெரிக்கா நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது


. 15 ஆண்டு முயற்சிக்கு பிறகு, ஏடிஎஸ் ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளிப்படுவதுபோல, ஏடிஎஸ் கருவியில் இருந்து மைக்ரோவேவ் ரேடியோ கதிர்வீச்சு வெளிப்படும். வீட்டு உபயோக பொருட்களில் (மைக்ரோவேவ் ஓவன்) இருக்கும் கதிர்வீச்சைவிட இது 100 மடங்கு வலுவாக இருக்கும். சக்தி வாய்ந்த லென்ஸ் கருவி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு கி.மீ. தூரத்தில் இருக்கும் எதிரியைக்கூட துல்லியமாக குறிபார்த்து சுட முடியும்.

கருவியில் இருந்து 95 ஜிகா ஹெர்ட்ஸ் என்ற அளவுக்கு கதிர்வீச்சு பாயும். சாதாரண நிலையில் மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட். 2 வினாடிக்கு இந்த கதிர்வீச்சு உடலில் பாய்ந்தாலே 130 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பாயும். உடல் தகிக்கும். அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் கதிர்வீச்சு எதிரியை தாக்குவதால் உடல் முழுவதும் பற்றியெரிவது போல எரிச்சல் ஏற்படும்.


எதிரி நிலைகுலைந்து விடுவார். ஆனால், தோலில் மிக மிக சொற்பமான ஆழத்துக்கு (ஒரு இஞ்ச்சில் 64-ல் ஒரு பங்கு) மட்டுமே கதிர்வீச்சு இறங்கும் என்பதால் காயம் ஏற்படாது. மனிதர்கள் மீது 11 ஆயிரத்துக்கும் அதிகமான முறை இந்த கதிர்வீச்சு பாய்ச்சி சோதனை செய்யப்பட்டது. அதில் 2 முறை மட்டுமே லேசான காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இது மிகவும் பாதுகாப்பானது. ஆப்கன் போரின்போது ஏடிஎஸ் ஆயுதம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், ஒருமுறைகூட பயன்படுத்தப்படவில்லை. இவ்வாறு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment